அடுத்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா, முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம், மாநில செயலர் கே.டி. ராகவன், சீனிவாசன், போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன. யாருக்கு வாய்ப்பு என்பது அமித்ஷாவின் கையில்தான் உள்ளது. புதிதாக தலைவராக நியமிக்கப்படுபவர் தான் டிசம்பர் மாதம் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலில் மாநில தலைவர் பதவிக்கு மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தலைவர் பதவியை தக்க வைப்பார், என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .எனினும் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
புதிய தலைவர் பதவிக்கு கடும் போட்டா போட்டி உள்ளது